Saturday, August 14, 2010

விலைவாசி

இந்தியாவில் அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது,ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏறும் போதெல்லாம் விலைவாசி பல மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது.ஏழை மேலும் ஏழையாக ,பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறும் வாய்ப்பு ஆபத்து அதிகமாக உள்ளது.
நியாயமான முறையில் மனிதன் சம்பாரிப்பதும் வாழ்வதும் இந்தியாவில் இயலாத ஒன்றாக ஆகிவிடுமோ என்ற பயம் எனக்கு எழுந்துள்ளது.
பணம் படைத்தவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே வாழ தகுந்த பூமியாக இந்தியா மாறிக்கொண்டே இருக்கிறது.
விவசாயம் குறைந்துகொண்டே வருகிறது .
அரசாங்கம் சாமான்யர்கள் பற்றி கவலைப்படுவதில்லை,ஏனென்றால் அரசாங்கம் என்பது அரசியல்வாதிகளின் கூட்டம்.அரசியல்வாதிகள் .தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம் கோடீஸ்வரர்கள் அவர்களுக்கு அவர்கள் கட்சியில் இருக்கும் தொண்டர்களின் கஷ்டம் கூட தெரியாது.மக்களின் வாங்கும் சக்தி எவ்வளவு என்பது அவர்களுக்கு ஒரு கட்டத்தில் தெரியாமலேயே போய்விடுகிறது.