Wednesday, June 11, 2008

ஹிந்தி வெறியா? இந்தியா என்றால் ஹிந்தி மட்டுமா?

இந்திய படங்களுக்காக விருது வழங்குகிறார்கள் என்றால் அதில் ஹிந்தி படங்களுக்கு மட்டும் விருது கொடுக்கிறார்களே எப்படி? ஐ ஐ எப் ஏ என்ற அமைப்பு (சர்வதேச இந்திய பிலிம் அகாடமி ) இந்திய படங்களுக்கான விருதுகள் என்று சொல்லி ஹிந்தி படங்களுக்கு மட்டும் விருது வழங்கிக்கொண்டிருக்கிறது .மலையாள நடிகர் மம்முட்டி இதை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்.
இரண்டாயிரத்து எட்டுக்கான விருதுகள் ;சிறந்த நடிகர் -ஷாருக்கான் ,சிறந்த நடிகை-கரீனா கபூர்,சிறந்த படம்-சக்தே இந்தியா ,சிறந்த மியூசிக்-ஏ ஆர் ரகுமான் (குரு-ஹிந்தி படத்திற்க்காக )
வேண்டாம் ஹிந்தி வெறி ....மொழி வெறி....

Tuesday, June 10, 2008

ஆனால் இந்த முறை சங்கம் வழி சம்பளம் ஒப்பந்தம் கைஒப்பம் ஆகியே தீரவேண்டும் என நான் முடிவெடுத்தேன்.ஒத்த கருத்துள்ள நண்பர்கள் ஜீவா, வருண் கார்த்திக்,நவீன்,ஐந்துகோவிலன்மற்றும் பலருடன் இணைந்து இதற்காக எட்டு நூறு பேரிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு ஆதரவு தரும்படி அழைப்பு விடுத்தோம். முன்னூற்று இருபத்து இரண்டு பேர்கள் வந்து கையொப்பம் இட்டு ஒத்துழைப்பு தந்தார்கள் .
அதை சங்க தலைவர் எஸ் ஏ சந்திர சேகர் அவர்களிடமும் கமிட்டீ நிர்வாகிகளிடமும் தந்த போது , அவர்களும் அதே கருத்தில் உள்ளதாக கூறினார்கள்.என்றாலும் ஒவ்வொரு முறையும் எதோ ஒரு காரணத்தால் தள்ளி போய்க்கொண்டிருப்பதால் இந்த முறை ஒரு குழு ஏற்படுத்தி சங்க நிர்வாகிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு போகும் போதெல்லாம் உடன் செல்வது என முடிவெடுத்து அது போலவே பத்து மாதத்திற்கு மேல் சென்று வந்தோம்.

பேச்சு வார்த்தை எப்போது ,எப்படி நடப்பு செல்கிறது என்பதை அவ்வப்போது விசாரித்தும் அறிந்து கொண்டோம்.
சங்க தலைவர்,கமிட்டீ உறுப்பினர்கள் ,இயக்குனர் எழில்,இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ,செயலாளர் அமீர்ஜான் ஆகியோர் உதவியுடன் சங்கம் வழி சம்பளம் கைஒப்பம் ஆனது.
ஆனால் அதில்கூட அடிப்படை சம்பளம் எவ்வளவு என்பது நிர்ணயிக்க படாவில்லை என்பது வேதனை.என்றபோதும் இதுவே மிகப்பெரிய சாதனைதான் .இந்த சமயத்தில் தான் தேர்தல் வந்தது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வழி சம்பளம்&தேர்தல் பற்றி...

உதவி இயக்குனர்களுக்கான சம்பளம் ஒரு சில இயக்குனர்களால் சரியாக தரப்படுவதில்லை .உதவி இயக்குனர்கள் அதை சங்கத்தில் புகாராக தருவது வெகு சிலரே . அவ்வாறு தரப்படும் புகார்களை இயக்குனர் சங்கம் பெப்சி எனப்படும் தொழிலாளர் சம்மேளத்தின் உதவியுடன் விசாரித்து சம்பளம் பெற்று தந்து விடுகிறது .

என்றாலும் பல உதவி இயக்குனர்கள் தங்களுக்கு சம்பளம் தராத இயக்குனர்கள் பற்றி புகார் தருவதில்லை .அப்படி புகார் தந்தால் தொடர்ந்து படங்களில் பணிபுரியும் வாய்ப்பு கை நழுவி போய்விடும் என அஞ்சி பலர் புகார் தருவதில்லை.இது சம்பளம் தரக்கூடாது என்று எண்ணக்கூடியவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

காலம் காலமாக உதவி இயக்குனர்கள் பலர் வறுமயில் வாடுவதற்கு இதுவே காரணமாகும்.இதற்கு சங்கம் வழி சம்பளமே சரியான தீர்வு என காலம் காலமாக பல்வேறு இயக்குனர்கள்,உதவி இயக்குனர்கள் பலரும் போராடி வந்தனர்.

ஒவ்வொரு முறை தயாரிப்பாளர் சங்கத்தில் சம்பளம் குறித்து பேச நேரும் போதெல்லாம் இந்தமுறை சங்கம் வழி சம்பளம் நடைமுறை படுத்தப்படும் என எண்ணி எண்ணி ஏமாந்து வந்தோம்,இதற்க்கு காரணம் யார் என்பது காலமே அறியும்.

நல்ல கதைகளுடன் தமிழ் திரைப்பட உதவி இயக்குனர்கள் ஹீரோக்களை தேடி கதை சொல்ல அலைந்துகொண்டிருக்கிறோம் .தமிழ் சினிமா ஹீரோக்கள் கையில் இருக்கிறது .பல ஹீரோக்களோ வருடத்திற்கு இரண்டு,மூன்று படங்களில் மட்டுமே நடிக்கிறார்கள் .அதோடு புது இயக்குனர்களுக்கு பலர் வாய்ப்பு வழங்குவது இல்லை.அதனால் நல்ல கதைகள் இருந்தும் புது இயக்குனர்கள் வாய்ப்பு பெறுவது கடினமாக இருக்கிறது .மேலும் கார்பரேட் கம்பனிகள் கூட இளம் இயக்குனர்களுக்கு வைப்பு வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன .புதிய சிந்தனைகள் கிடைக்க புதியவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம் என்பதை ஏன் மறந்து போகிறார்கள்?
தமிழ்&தெலுங்கு படம் ;கேடி&iஜாது,
நடிகர்கள்: ரவிகிருஷ்ணா&அதுல் குல்கர்னி
tamil film:yaradi nee mohini... artiste:nayanthara

Monday, June 9, 2008

ekambavanan

dear friends,
I am a film co-director.Now i awaiting film direction chances.Also story writer,dialogue writer, and poet.living in chennai (tamilnadu,india).I have 13 years experience in tamil and telugu industry.(indian regional lounguage films).More than 300 poems and 25 short stories puplished in many tamil weakly and daily magazines.If u interest to read my poems please visit - www. modern tamil world.com.