Tuesday, June 10, 2008

ஆனால் இந்த முறை சங்கம் வழி சம்பளம் ஒப்பந்தம் கைஒப்பம் ஆகியே தீரவேண்டும் என நான் முடிவெடுத்தேன்.ஒத்த கருத்துள்ள நண்பர்கள் ஜீவா, வருண் கார்த்திக்,நவீன்,ஐந்துகோவிலன்மற்றும் பலருடன் இணைந்து இதற்காக எட்டு நூறு பேரிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு ஆதரவு தரும்படி அழைப்பு விடுத்தோம். முன்னூற்று இருபத்து இரண்டு பேர்கள் வந்து கையொப்பம் இட்டு ஒத்துழைப்பு தந்தார்கள் .
அதை சங்க தலைவர் எஸ் ஏ சந்திர சேகர் அவர்களிடமும் கமிட்டீ நிர்வாகிகளிடமும் தந்த போது , அவர்களும் அதே கருத்தில் உள்ளதாக கூறினார்கள்.என்றாலும் ஒவ்வொரு முறையும் எதோ ஒரு காரணத்தால் தள்ளி போய்க்கொண்டிருப்பதால் இந்த முறை ஒரு குழு ஏற்படுத்தி சங்க நிர்வாகிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு போகும் போதெல்லாம் உடன் செல்வது என முடிவெடுத்து அது போலவே பத்து மாதத்திற்கு மேல் சென்று வந்தோம்.

பேச்சு வார்த்தை எப்போது ,எப்படி நடப்பு செல்கிறது என்பதை அவ்வப்போது விசாரித்தும் அறிந்து கொண்டோம்.
சங்க தலைவர்,கமிட்டீ உறுப்பினர்கள் ,இயக்குனர் எழில்,இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ,செயலாளர் அமீர்ஜான் ஆகியோர் உதவியுடன் சங்கம் வழி சம்பளம் கைஒப்பம் ஆனது.
ஆனால் அதில்கூட அடிப்படை சம்பளம் எவ்வளவு என்பது நிர்ணயிக்க படாவில்லை என்பது வேதனை.என்றபோதும் இதுவே மிகப்பெரிய சாதனைதான் .இந்த சமயத்தில் தான் தேர்தல் வந்தது.

No comments: