Tuesday, June 10, 2008

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வழி சம்பளம்&தேர்தல் பற்றி...

உதவி இயக்குனர்களுக்கான சம்பளம் ஒரு சில இயக்குனர்களால் சரியாக தரப்படுவதில்லை .உதவி இயக்குனர்கள் அதை சங்கத்தில் புகாராக தருவது வெகு சிலரே . அவ்வாறு தரப்படும் புகார்களை இயக்குனர் சங்கம் பெப்சி எனப்படும் தொழிலாளர் சம்மேளத்தின் உதவியுடன் விசாரித்து சம்பளம் பெற்று தந்து விடுகிறது .

என்றாலும் பல உதவி இயக்குனர்கள் தங்களுக்கு சம்பளம் தராத இயக்குனர்கள் பற்றி புகார் தருவதில்லை .அப்படி புகார் தந்தால் தொடர்ந்து படங்களில் பணிபுரியும் வாய்ப்பு கை நழுவி போய்விடும் என அஞ்சி பலர் புகார் தருவதில்லை.இது சம்பளம் தரக்கூடாது என்று எண்ணக்கூடியவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

காலம் காலமாக உதவி இயக்குனர்கள் பலர் வறுமயில் வாடுவதற்கு இதுவே காரணமாகும்.இதற்கு சங்கம் வழி சம்பளமே சரியான தீர்வு என காலம் காலமாக பல்வேறு இயக்குனர்கள்,உதவி இயக்குனர்கள் பலரும் போராடி வந்தனர்.

ஒவ்வொரு முறை தயாரிப்பாளர் சங்கத்தில் சம்பளம் குறித்து பேச நேரும் போதெல்லாம் இந்தமுறை சங்கம் வழி சம்பளம் நடைமுறை படுத்தப்படும் என எண்ணி எண்ணி ஏமாந்து வந்தோம்,இதற்க்கு காரணம் யார் என்பது காலமே அறியும்.

No comments: